அனைத்துலக குப்பைத் தொட்டி நாடாக மலேசியா இருக்காது

0

அனைத்துலக அளவில் ஒரு குப்பைத் தொட்டி நாடாக மலேசியா இருக்காது என்று நீர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோ துவான் இப்ராஹிம் தெரிவித்தார்.
அனைத்துலக அளவில் குப்பைகளை கொட்டும் இடம் மலேசியா அல்ல. மேலும்,
நச்சுக் கழிவுகள் மற்றும் நெகிழி பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை மலேசியாவுக்குள் கொண்டு வர வேண்டாம்.
நச்சுக் கழிவு மற்றும் நெகிழ் பொருட்களை கொண்டு வருவதற்கு முயற்சித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டத்தோ துவான் இப்ராஹிம் எச்சரித்தார்.
மார்ச் மாதத்தில் நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு காலத்தில் நச்சுக் கழிவுகள் அடங்கிய 13 கொள்கலன்களையும் 42 நெகிழி பொருட்கள் கொண்ட கொள்கலன்களையும் கண்டுபிடித்து அதனை சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
அந்த மொத்த கொள்கலனின் எடை 7 லட்சத்து 96,553 கிலோகிராம் என்று கோலக் கிராய் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் லத்திப் அப்துல் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு துவான் இப்ராஹிம் இவ்வாறு பதிலளித்தார்.
கையெழுத்திடப்பட்ட பெசெல் மாநாட்டிற்கு எதிரான அம்சங்களிலிருந்து, மலேசியா விடுபட வேண்டும் என்பதில் அது உறுதியாக இருப்பதாக அவர் சொன்னார்.
பெசெல் மாநாட்டிற்கு ஏற்ப, மலேசியா அனைத்துலக குப்பைத் தொட்டியாக மாறுவதிலிருந்து தடுக்க நீர் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை குறித்தும் அவர் விளக்கமளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − 13 =