அனுமதியின்றி மாநிலத்தை கடந்த 11 பேருக்கு அபராதம்


பாலிங்கில் இருந்து கோலமுடாவிற்கு அனுமதியின்றி சென்றதற்காக ஒரு பெண்மணி உட்பட 11 பேருக்கு தலா 5000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது என்று பாலிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டன் ஷம்சுடின் மாமாட் கூறினார்.19 முதல் 40 வயது வரையிலான அனைவரும் மாநிலத்தை கடப்பதற்கான எந்த அனுமதி கடிதங்களையும் காட்ட இயலவில்லை.
அதிகாலை 5 மணி முதல் 7.20 மணி வரை நடைபெற்ற ஓப்ஸ் ஹாஸ் ரெந்தாஸ் நடவடிக்கையின்போது கம்போங் கோல லெகோங் கோல கெட்டில் வட்டாரத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 5000 வெள்ளி அபராதம் 7 நாட்களுக்குள் செலுத்தப்பட்டால் அபராதம் பாதியாக குறைக்கப்படும் எனினும் மாவட்ட சுகாதார மையத்தில் இந்த அபராதத்தை செலுத்த 14 நாட்களுக்கு கால அவகாசம் உள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் நிர்ணயித்துள்ள எஸ்ஓபி எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட பணி நெறிமுறையை (எஸ்ஓபி) பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எஸ்ஓபியை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − four =