அனிபாவின் சட்ட மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்!

மாநில அறவாரியத்திற்குச் சொந்தமான நிலம் தொடர்பாக பிசிஎஸ் கட்சித் தலைவர் அனிபா அமான் விடுத்துள்ள சட்ட மிரட்டல் குறித்து தாம் அஞ்சப் போவதில்லை என சபா பராமரிப்பு முதலமைச்சர் ஷாபி அப்டால் கூறினார்.
இந்த முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதில்தர அனைத்துப் புள்ளிவிவரங்களும் தம்மிடம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த நில முறைகேட்டில் தமக்கு எவ்வித தொடர்பும் இல்லை என வாரிசான் கட்சியின் தலைவருமான அவர் சொன்னார்.
இந்த நில முறைகேட்டில் அனிபாவின் குடும்ப உறுப்பினர் ஒருவரின் நிறுவனம்தான் சம்பந்தப்பட்டுள்ளது. சபா அறவாரியத்திற்குச் சொந்தமாக 50,000 ஏக்கர் நிலம் சம்பந்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று காலை இங்கு மலேசிய தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபி செய்தியாளர்களிடம் பேசினார்.
இந்த விவகாரத்தை அனிபா நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லலாம். ஆனால் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதற்கான பதிலைத் தர சங்கங்களின் பதிவிலாகா மற்றும் மலேசிய நிறுவனங்களுக்கான ஆணையமும் அங்கு இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
சபா அறவாரியத்திற்குச் சொந்தமான 50,000 ஏக்கர் நிலத்தை ஒரு முன்னாள் மாநிலத் தலைவர் தமது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் வழங்கியுள்ளதாக கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி அம்பலப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 4 =