அந்நிய மீனவர்களுக்கு பிரம்படி

நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்பட்டிருந்த காலகட்டத்தில் அந்நிய மீனவர் களை விரட்டியடித்தது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை என்பதால் அவர் களுக்கு பிரம்படி வழங்கப்பட வேண்டும் என்று கடற்படை அமலாக்க ஏஜென்சி பரிந்துரை செய்துள்ளது என்று அதன் தலைமை இயக்குநர் லக்ஸமணா டத்தோ முகம்மது ஸூபில் மாட் சோம் கூறினார்.
மேல் நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் தமது இலாகா பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாக அவர் கூறினார்.
நடமாட்ட கட்டுப்பாடு ஆணை அமல்படுத்தப்படுவ தற்கு முன்னர் அந்நிய மீனவர் களுக்கு மலேசியாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கோவிட் – 19 தொற்று பரவியுள்ள இந்த காலகட்டத்தில் அவர்கள் விரட்டியடிக்கப் படுகின்றனர்.
நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்பட்டுள்ள காலகட்டத்தில் அந்நிய மீனவ படகுகளுக்கு நாங்கள் கடுமை யான எச்சரிக்கையை வழங்கி இருந்தோம். எனினும் ஊடுருவும் நடவடிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார் முகம்மது ஸூபில்.
கிழக்கு கரையோரத்தில் 55, சரவாக் நீரிணையில் 17, ஜொகூர் நீரிணையில் 16 என கடந்த 19 மார்ச்சில் தொடங்கி மொத்தம் 88 ஊடுருவல் நடவடிக்கைகள் பதிவாகி யுள்ளன.
கடந்த 10 ஜூனில் நிபந் தனையுடள் கூடிய நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை நிறை வடைந்ததைத் தொடர்ந்து அந்நிய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
கைதான அந்நிய மீனவர்கள் பீடோங் தீவிற்கு அருகில் வைக்கப்படுவர்.
அமலாக்க அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக உள்நாட்டு பதிவு எண்களை சில அந்நிய படகுகள் கொண்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 14 =