அந்நியர்களைக் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 4 குடிநுழைவு இலாகா அதிகாரிகளையும் ஒரு கடற்படை போலீஸ் அதிகாரி யையும் ஜொகூர் போலீஸ் கைது செய்துள்ளது.
இவ்வாண்டு மார்ச் முதல் ஜொகூர் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில், அவர் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் காவல்படைத் தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை கூறினார். கடந்த ஜூன் 26ஆம் தேதி பாசீர் கூடாங் படகுத் துறையைச் சேர்ந்த 4 குடிநுழைவு அதிகாரிகளை ஜொகூர் காவல் படையினர் கைது செய்ததாக அவர் சொன்னார். ஒரு போலி குடிநுழைவு ரப்பர் முத்திரைக்காக ஒவ்வோர் இந்தோனேசியப் பிரஜையிடமும் 1,500 வெள்ளி முதல் 2,500 வெள்ளி வரை இவர்கள் கையூட்டாகப் பெற்றதாக அவர் சொன்னார்.
நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு காலத்தின் போது சட்டவிரோத நடவடிக்கைகளில் இந்த அதிகாரிகள் ஈடுபட்டு வந்ததாக அவர் தெரிவித்தார்.
இவர்களுக்கு உடந்தையாக இருந்த கடற்படை போலீஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.