அந்த பணிப்பெண் ஓர் அரசியல் பகடைக்காய்;

0

பேரா சட்டமன்ற உறுப்பினர் போல் யோங் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வன்செயல் வழக்கு விசாரணைக்கான தேதியை குறிக்க நேற்று நீதிமன்றம் கூடியபோது பாதிக்கப்பட்ட அந்த பணிப்பெண் ஓர் அரசியல் பகடைக்காயாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார் என்று அவரது வழக்கறிஞர் ஒருவர் கூறினார்.
இந்த வழக்கில் அந்தப் பெண்ணின் சார்பில் வழக்கை பார்வையிடும் கேப்ரியல் சுசாயான் இவ்வாறு கூறியதைத் தொடர்ந்து போல் யோங்கின் வழக்கறிஞர் உடனடியாக குறுக்கிட்டு இப்படி ஒரு குற்றச்சாட்டை கூறும் நீங்கள் உடனடியாக இது குறித்து காவல்துறையில் புகார் செய்யுங்கள் என்றார். ஓர் இந்தோனேசியப் பணிப்பெண்ணை தமது இல்லத்தில் பாலியல் வன்செயல் புரிந்ததாக குற்றச்சாட்டை எதிர்நோக்கும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான போல் யோங்கோடு அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் திரண்டிருந்தனர்.
இவ்வாண்டு ஜூலை 7ஆம் தேதி இரவு 8.15க்கும் 9.15க்கும் இடையில் மேரு டேசா பார்க் என்ற இடத்தில் உள்ள வீட்டின் மேல்மாடியில் அந்த 23 வயது பெண்ணிடம் பாலியல் வன்செயல் புரிந்ததாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருக்கிறது.
அவரது சார்பில் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் லியோங் சியோக் ஹெங், ஜெலுத்தோங் எம்பி ஆர்.எஸ்.என்.ராயர், புக்கிட் குளுகோர் எம்பி ராம் கர்ப்பால் சிங், பார்ஹான் சாப்பியான் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள்.
அரசு தரப்பில் டிபிபி அஸஹார் மொக்தாரும் அவருக்கு துணையாக ஐனுல் வர்டா ஷஹிடான், நைராத்துல் ஆதிரா அஸ்மான் ஆகியோர் ஆஜராகிறார்கள்.
செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி நோராஸ்மா காலிட் தலைமையில் நடந்த இந்த வழக்கில் அக்டோபர் 22ஆம் தேதி இந்த வழக்கு விசாரணையின் நிர்வாக அம்சங்கள் பரிசீலிக்கப்பட்டு பின்னர் இந்த வழக்கு விசாரணை நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
நேற்று நீதிமன்றத்துக்கு வெளியே துரோனோ சட்டமன்ற உறுப்பினருமான போல் யோங்கிற்கு ஆதரவாக ’நீடு வாழ்க என்ற முழக்கம் எழுந்ததோடு ஙா கோர் மிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல்களும் எழுந்தன.
ஆட்சிக்குழு உறுப்பினர் மீதான வழக்கில் வழக்கறிஞர் தகவல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here