அதிபர் எர்டோகனுடன் பிரதமர் பேச்சுவார்த்தை

0

அங்காரா (துருக்கி), ஜூலை 26-
நேற்று இரவு அங்காரா நகரை வந்தடைந்த பிரதமர் துன் டாக்டர் மகாதீர், துருக்கி அதிபர் ரெசேப் தாயிப் எர்டோகனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு அங்காராவின் எசென்போகா விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமரை துருக்கி, தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் முஸ்தபா வராங் மற்றும் அங்காரா கவர்னர் வாசிப் சாஹின் வரவேற்றனர்.
அதிபர் எர்டோகனுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்குவதற்காக, அவருடன் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை பிரதமர் நடத்தினார்.


வர்த்தகம், தற்காப்பு மற்றும் இதர விவகாரங்கள் குறித்து துருக்கி அதிபருடன் மகாதீர் விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில் பிரதமருடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா, தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு, அனைத்துலக வாணிப மற்றும் தொழில்துறை அமைச்சர் டேரல் லேக்கிங் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள மகாதீர், துருக்கிக்கு மேற்கொள்ளும் முதலாவது அதிகாரப்பூர்வ பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + twenty =