அதிகாரிகள் தன்மூப்பாக செயல்பட்டுள்ளனர்

0

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர் பிருப்பதாக சொஸ்மா சட்டத்தின் கீழ் 12 பேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை கீழறுப்பு செய்ய மேற்கொள்ளப்பட்ட தன்மூப்பான செயல் என புறநகர் மேம்பாட்டுத்துறை துணையமைச்சர் ஆர்.சிவராசா குற்றஞ்சாட்டினார்.
சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ், 2 வாரம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும்போது இந்த 12 பேரையும் குற்றஞ்சாட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒன்றுக்கு மேற்பட்ட அரசாங்கக் கழகங்களில் இந்த தன்மூப்பான செயல் நடந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் விசாரணை செய்யும் அதிகாரம் கையெழுத்திடப்பட்டுவிட்டால், அதை மீட்டுக்கொள்வது மிகக் கடினமாகும் என்றார் அவர்.
இவர்களை கைது செய்ய மேல் நிலையில் அனுமதி எதுவும் தரப்படவில்லை. போலீஸ் தன்மூப்பாக இந்த வேலையைச் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த கைது நடவடிக்கையால் இந்திய ஆதரவாளர்கள், மலாய் மற்றும் சீன ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இதன் காரணமாகவே அண்மையில் நடந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் படுதோல்வியடைந்ததாக சிவராசா குறிப்பிட்டார்.
காடேக் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சாமிநாதன், சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் உட்பட 12 பேர் அக்டோபர் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் பீனல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − eleven =