அதிகாரத்தை தற்காத்துக்கொள்ள பெரிக்காத்தான் அரசாங்கம் பதவிகளை வழங்கி வருகிறது!

தனது அதிகாரத்தை தற்காத் துக்கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் பதவி களையும் கையூட்டுகளையும் வழங்கி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடுமையாக சாடி னார்.
ஆகையால் எதிர்வரும் சபா சட்டமன்ற தேர்தலில் இனவாதம் மற்றும் ஊழல்மிக்க அரசியலை மக்கள் நிராகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
நேற்று முன்தினம் இரவு பிகேஆர் தேர்தல் இயந்திரத்தை தொடக்கி வைத்தப் பின் அக் கட்சியின் தலைவருமான அவர் பேசினார்.
இதனிடையே சபா சட்ட மன்ற தேர்தலுக்கான தொகுதி கள் ஒதுக்கீடு குறித்து நேற்று காலை சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஷாப்பி அப்டாலுடன் அன்வார் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பில் கலந்துக் கொண்ட பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தி யோன், பிகேஆர் கட்சிக்கு நியமன தொகுதிகள் வழங்கப் படும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த தேர்தலில் சபா சட்ட மன்ற தொகுதிகள் 60வதிலிருந்து 73ஆக அதிகாரிக்கப்பட்டுள்ளதாக, பிகேஆருக்கு கூடுதல் தொகுதி கள் வழங்கப்படலாம் என்றார் அவர். கடந்த சபா சட்டமன்ற தேர்தலில் பிகேஆர் 8 தொகுதி களில் போட்டியிட்டதாக முன்னாள் உள்நாட்டு வாணிப மற்றும் பயினீட்டாளர்கள் விவகார அமைச்சருமான அவர் சொன்hனர்.
இந்த சந்திப்பில் அன்வாரின் துணைவியாரும் பிகேஆர் ஆலோசகருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் கலந்துக் கொண் டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + seven =