அதிகரித்து வரும் ஆண்மைக்குறைபாடு

தங்களிடையே காணப்படும் ஆண்மை தன்மை அற்ற நிலமைப்பற்றி கணவன்மார்கள் உண்மையில் மனக்கவலை அடைந்து வருகின்றனர். இந் நிலைமையை விஞ்ஞான ஆய்வு கள், ஆராய்ந்து கண்டறியப் தகவல்கள் நிரூபிக்கின்றன என்று தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியத்தின் (எல்.பி.பி.கே.என்.) தலைமை இயக்குநர் அப்துல் சுக்கூர் அப்துல்லா கூறினார்.
அனைத்துலக ரீதியில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின்படி, கடந்த 20 வருடத்தில் ஆண்மை யற்ற தன்மை 40லிருந்து 50 சதவீதம் அதிகரித்து தற்போது ஆண்களின் மக்கள் தொகை யில் 7 சதவீதத்தினரைப் பாதித் திருக்கிறது. எனவே 100 ஆண் களில் 7 பேருக்கு ஆண்மையற்ற தன்மை காணப்படுகிறது என்பது இதன் பொருளாகும்.
30 வயதுக்கு கீழே உள்ள ஆண்களின் ஆண்மைத் தன்மை 15 சதவீதம் குறைந்து விட்டது என்று சுக்கூர் கூறினார்.
2010லிருந்து 2019 வரை அவ்வாரியம் வெளியிட்ட அடிப் படை விபரத்தை மேற்கோள் காட்டி, நடத்தப்பட்ட விந்து, பகுப்பாய்வு பரிசோதனைகளின் வழி 60 சதவீதம் விந்துக்கள் வழக்கத்திற்கு மாறான இயல்பை கொண்டிருப்பது கண்டறியப் பட்டது என்று அவர் குறிப் பிட்டார்.
இயல்பான உடலுறவு மேற் கொண்டு இருக்கும் 95 சதவீத ஆண்கள் தாங்களும் ஆண்மை தொடர்பான பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்பதனை அறியாமல் இருக் கிறார்கள் என்று அந்த ஆய்வு கள் மூலம் கண்டறியப்பட் டுள்ளது என்று அவர் சொன்னார்.
திருமணமான தம்பதியின ரிடையே ஆண்மை குறைபாடு பிரச்சினைகள் 2004இல் 6.9 சதவீதத்திலிருந்து 2014இல் 8.6 சதவீதத்திற்கு அதிகரித்திருக் கிறது என அவ்வாரியத்தின் (எல்பிபிகேஎன்) ஆய்வுகள் காட்டுகிறது. அந்த சதவீதம் எதிர்காலத் தில் 10லிருந்து 12 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று சுக்கூர் பெர்னாமாவிடம் அண்மையில் கூறினார்.
தற்போது காணப்படும் நிலைமைப் பற்றி மனக் கவலையை வெளியிட்ட சுக்கூர் அப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தகுந்த நடவடிக்கைகள் உடனடி யாக மேற்கொள்ளப்பட வேண் டும் என்று வலியுறுத்தினார். எதிர்காலத்தில் அடுத்த தலை முறையினர் ‘சுருங்கி’ போகாமல் இருப்பதை உறுதி செய்ய இது மிகவும் அவசியம்.
இப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்கு ஒரு பகுதியாக அவ்வாரி யம் (எல்பிபிகேஎன்) நிறைய பட்டறைகளை (கிளினிக்குகள்) ஏற்பாடு செய்திருக்கிறது.
அத்தகைய பட்டறைகளில் கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் ஒன்று சேர்ந்து கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும. ஒன்றாக இணைந்து 100 சதவீத தம்பதியினர் கலந்து கொள்வதின் வழி ஆண் களிடையே காணப்படும் ஈகோ (தன்மீதான பற்றுணர்வு) மற்றும் எதிர்க்கும் தன்மை போன்றவை களை குறைக்க முடியும்.
ஆண்களிடையே காணப் படும் ஆண்மையற்ற தன்மைக்கு பல காரணங்கள் இருக்கின்றன என்று சுக்கூர் சுட்டிக்காட்டினார்.
உடலுறவில் ஆசையி ன்மை, பரம்பரை வியாதிகளின் தாக்கம் ஆண்மை வீரியக் குறைவு, விரை வாக விந்து வெளியாதல் போன்றவையும் அவற்றுள் அடங்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 1 =