அதிகமான மலேசியர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்குச் செல்லத் தடை

0

ஆஸ்திரேலியாவில் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் மலேசியா முதல் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 58,724 பேருக்கு அந்நாட்டில் நுழைய சிவப்பு அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கும் வேளையில், மலேசியாவைச் சேர்ந்த 68,417 பேருக்கு அத்தடை விதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது கடந்தாண்டு விதிக்கப்பட்டதை விட 23.6 விழுக்காடு அதிகமாகும்.
தி ஆஸ்திரேலியன் நாளிதழ் செய்திபடி அங்கு செல்ல விண்ணப்பித்திருக்கும் 37.2 விழுக்காட்டு மலேசியர்களுக்கு அம்மாதிரியான தடை விதிக்கப்பட்டிருக்கும் வேளையில், நியூசிலாந்தில் 43,470 மலேசியர்களுக்கும் இந்தியாவில் 36,168 பேருக்கும் பிரிட்டனில் நுழைய 28,770 மலேசியர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதில் 35,760 மலேசியர்கள் சந்தேகப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் வேளையில், 12,934 பேர் காமன்வெல்த் நாடுகளில் சந்தேகப்படும் பட்டியலிலும் 9,867 பேர் அதிக காலம் அனுமதியின்றி தங்கியிருந்ததாகவும் 1,350 பேர் விசா நிபந்தனைகளை மீறியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த எண்ணிக்கைக்கு ஆஸ்திரேலியாவில் அனுசரிக்கப்படும் தற்காலிக மற்றும் பாதுகாப்பு விசாக்கள் வழங்கப்படுவதோடு, வேலைக்கான நிபந்தனைகளை மீறி செயல்பட்டதால் சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாமல் இருப்பதுவும் காரணமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =