அதிகமான தொகுதிகளை கைப்பற்றினால் பிரதமர் வேட்பாளர் அம்னோவை சேர்ந்தவராயிருப்பார்

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோ அதிகமான தொகுதிகளை கைப்பற்றினால் பெரிக்கத்தான் நேஷனல் பிரதமர் வேட்பாளர் அம்னோவை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என அக்கட்சியின் உதவி தலைவர் காலிட் நோர்டின் கூறினார்.
குறைந்த தொகுதிகளை கைப்பற்றும் ஒரு கட்சியைச் சேர்ந்த
வர் பிரதமராக நியமிக்கப்படுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றார் அவர்.
முன்னாள் பக்காத்தான் ஹராப் பான் அரசாங்கம் இந்த ஜனநாயக நடைமுறையை மீறிவிட்டதாக முன்னாள் ஜொகூர் மந்திரி பெசாரான அவர் கூறினார்.
கடந்த 14ஆவது பொதுத்
தேர்தலுக்குப் பிறகு 13 தொகுதிகளை மட்டுமே
வென்ற பெர்சத்து கட்சியின் அவைத் தலைவர் பிரதமராக நியமிக்கப்பட்டார் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த செயல் ஆரோக்கியமற்ற அரசியல் கலாசாரமாகும். இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஆகையால், அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ அதிகமான தொகுதிகளை கைப்பற்றினால் அம்னோவைச் சேர்ந்தவர் தான் பிரதமராக வேண்டும் என காலிட் வலியுறுத்தினார்.
அதே வேளையில், அம்னோ கூடுதல் தொகுதிகளை கைப்பற்றா
விட்டாலும், ஒரு பிரதமர் வேட்பா ளரை தயார் செய்து கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
காரணம் அம்னோ வேட்பாள ருக்கு ஆதரவு கிடைத்தால் அரசாங்கத்தை அமைக்க முடியும் என காலிட் தெரிவித்தார்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + twenty =