அணிதாவச் சொல்லி என்னிடம் மட்டும்தான் இதுவரை பேச்சுவார்த்தைக்கு வரவில்லை

பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தரப்பிலான அணிக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அணிமாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பகிரங்கமாகத் தெரிவித்தார்.தமது தரப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எப்படியாவது அணிமாற்றிவிட வேண்டும் என்ற முயற்சி மிக வெளிப்படையாக நடந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும் இதுவரை போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினரான தம்மை யாரும் அணிமாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த அரசியல் சூழலில் இங்கிருந்து அங்கு அணிதாவல் செய்பவர்களும் ஒரு நிலையான அல்லது திடமான நிலைப்பாட்டில் உள்ளவர்கள் அல்லர். அணிதாவல் செய்வதற்கு முன்னதாக அவர்கள் ஏற்கெனவே இருந்த அணியிலும் அவ்வளவு உறுதியானவர்களாகக் கருதப்படவில்லை.
என்னை மட்டும்தான் இதுவரை யாரும் வந்து அணி மாறச்சொல்லி ஆசைவார்த்தைகளைப் பேசவில்லை. அப்படி யாராவது வந்து என்னிடம் பேசினால் அவ்வளவுதான். சம்பந்தப்பட்டவர்களுக்கு நான் யார் என்று காட்டுவேன் என்றும் அழுத்தமான குரலில் அன்வார் இப்ராஹிம் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here