அடுத்த வாரம் சிரம்பானில் தற்காலிக நீர் விநியோகத் தடை

சிரம்பான், ரெம்பாவ் ஆகிய இரு மாவட்டங்களில், அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 24 ) காலை மணி 8 தொடங்கி 24 மணி நேரத்திற்குத் தற்காலிக நீர் விநியோகத் தடை ஏற்படும்.
சிரம்பான், சுங்கை தெமியாங் பாலத்தில் நீர் குழாய் -யை இடம் மாற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. மேலும், ரெம்பாவிலுள்ள பெடாஸ் லாமா () நீர் சுத்திகரிப்பு ஆலையில், நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதையடுத்து , அவ்விரு மாவட்டங்களிலும், அட்டவணையிடப்பட்ட நீர் விநியோகத் தடை ஏற்படுமென நெகிரி செம்பிலான் நீர் நிர்வகிப்பு நிறுவனத்தின் (), பொது தொடர்பு பிரிவின் தலைவர், நோர்சிதா இஸ்மாயில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four + twelve =