அடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை பக்காத்தான் தற்காத்துக் கொள்ளும்

0

அடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்காத்தான் ஹராப்பான் தற்காத்துக் கொள்ளும் என மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநில சட்டமன்றத் தேர்தல் நடந்தால், தனது அனைத்துத் தொகுதிகளையும் பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் கைப்பற்றும் என்றார் அவர்.
அடுத்த பொதுத்தேர்தலில் சிலாங்கூரை முவாஃபக்காட் நேஷனல்ய கைப்பற்றும் என சிலாங்கூர் அம்னோ தலைவர் டான்ஸ்ரீ நோ ஒமாரின் அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
சிலாங்கூர் மக்களுக்கு பக்காத்தான் ஹராப்பான் சிறந்த சேவைகளை வழங்கி வருவதால், அடுத்த பொதுத்தேர்தலில் ஆளுங்கூட்டணியை மக்கள் ஆதரிப்பார்கள் என அவர் சொன்னார்.
கோவிட்-19 தாக்கத்தால் மாநில மக்கள் எதிர்நோக்கி வரும் சிரமங்களுக்குத் தீர்வு காண்பதில் பக்காத்தான் ஹராப்பான் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
ஆகையால் தேர்தலைப் பற்றி கவனம் செலுத்த ஆளுங் கூட்டணிக்கு அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டார்.
ஆனால் அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் மட்டுமே எதிர்க்கட்சித்
தலைவர்கள் குறியாக இருந்து வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − seven =