அடுத்தாண்டு முதல் உணவகங்களில் புகை பிடிக்கத் தடை

அடுத்த ஆண்டிலிருந்து உணவகத்தில் புகை பிடிப்பதற்கு விதிக்கப்படும் தடை நடப்புக்கு வருகிறது. இதை மீறி புகை பிடித்தால் தவறு செய்பவருக்கு சமூக சேவை தண்டனைகள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் ஸுல்கிப்ளி அஹ்மட் கூறியிருக் கிறார். இதுவரை இந்த தவறை அனுமதித்த உணவகங்களுக்கு 30,698 எச்ஐகே கடிதங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 1 லட்சத்து 29 ஆயிரத்து 180 உணவகங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 6 மாத கால அவகாசம் அனைவருக்கும் தரப்பட்டது.
உணவகங்களில் இத்தகைய தவறுகளை புரிகின்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது மாறாக அவர்கள் பொதுக் கழிவறைகளை சுத்தப்படுத்துவது உட்பட பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.
அமைச்சு இந்த விதிமுறையில் அவ்வளவு ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. பாதி மனதுடன் தான் இதை செய்கிறது என்பதால் உணவகங்களில் புகை பிடிப்பது ஆரம்பமாகிவிட்டது என்று சிலர் என்னிடமே கூறுகிறார்கள். இந்தக் கருத்தை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன். அடுத்தாண்டு கண்டிப்பாக இந்தத் தடை அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + four =