அடுத்தாண்டு பட்ஜெட்டில் நிதியுதவி வேண்டும் டாக்சி ஓட்டுநர்கள் போர்க்கொடி

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தங்களுக்கு ரொக்க உதவிகளைச் செய்ய நிதி ஒதுக்க வேண்டுமென வாடகைக் கார் ஓட்டுநர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர். டெக்சி செமலேசியா எனும் கூட்டமைப்பின்(ஜிடிஎஸ்எம்) தலைவர் கமாருடின் முகமட் ஹுசேன், நிதியமைச்சு தங்களின் நிலைமையைச் சீர்தூக்கிப் பார்த்து, தங்களைப் பி40 பிரிவுத் தகுதியில் வைத்து, நிதியுதவி வழங்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். தங்களுக்கு அரசின் பிரிஹாத்தின் சிறப்பு உதவிநிதி, அரசின் வாடகைக் கார் உரிமம் போன்றவை கிடைத்திருந்தாலும், அரசின் மை-சலாம் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தில் உதவி கிடைக்கவில்லை என்று கமாருடின் தெரிவித்தார். அரசின் ஒரு முறையிலான நிதியுதவிக்குத் தாங்கள் நன்றி சொல்லும் வேளையில், அந்த நிதியை 1,000 ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். மேலும், தங்களுக்குப் பெட்ரோல், டீசல் கட்டணத்தில் 30 விழுக்காடு கழிவும் புதிய டாக்சிகளை வாங்கும்போது அதற்கான விற்பனை, கலால் வரிகளுக்கு விலக்களிக்க வேண்டுமென்றும் கோரிக்கையை அவர் முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 5 =