அடுத்தவாரம் 3 அரசியல் கட்சிகளின் பேராளர்கள் மாநாடு

0

அடுத்தவாரம் இறுதியில் 3 அரசியல் கட்சிகளின் பேராளர்கள் மாநாடு நடைபெறவுள்ளது.
பிகேஆர், தேசிய முன்னணியின் முதுகெலும்பான அம்னோ மற்றும் பக்காத்தான் ஹராப்பானின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான அமானா ஆகியன தங்களின் பேராளர்கள் மாநாட்டை நடத்துகின்றன.
இருப்பினும் பிகேஆர் பேராளர் மாநாடு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் – அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி ஆகியோருக்கிடையிலான விரிசல், இந்த மாநாட்டில் எப்படி பிரதிபலிக்கும் என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவிருக்கிறது.
கடந்த சில நாட்களாக அன்வார் மற்றும் அஸ்மின் ஆதரவாளர்களுக்கிடையே வாய்ச்சண்டை அதிகரித்து வருகிறது.
அஸ்மின் பொருளாதார விவகார அமைச்சராக நியமனம்
பெற்றது முதல் இவர்களுக்கிடை யிலான விரிசல் மேலும் மோசமடைந் துள்ளது. அதே வேளையில், அடுத்த பிரதமராக அன்வாருக்கு பதிலாக அஸ்மின் நியமனம் பெறலாம் என்ற செய்தி வெளியானதைத் தொடர்ந்து இந்த நிலைமை உச்சகட்டத்தில் உள்ளது.
இதனிடையே அடுத்த வாரம் புத்ரா உலக வாணிப மையத்தில், அண்மையில் நடந்த தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றியை அம்னோ கொண்டாடுவதைப் பார்க்கமுடியும்.
மேலும் முன்னாள் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் சின் பெங்கின் அஸ்தியை நாட்டிற்குள் கொண்டுவந்த விவகாரம் குறித்து பெர்சத்து தலைவருமான பிரதமர் துன் மகாதீரை அம்னோ பேராளர்கள் கடுமையாக சாடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here