அடுக்குமாடி வீடுகளில் அந்நியர்களின் அட்டகாசம்

நாட்டிலுள்ள அடுக்குமாடிகள் பல தொகுப்புகளாக இருக்கின்ற நிலையில் ஒவ்வொரு தொகுப்பி லும் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். அந்த வீடமைப்புக்கு வேலி, சுவர்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளியில் இருப்போர், அந்த அடுக்குமாடிகளுக்குள் நுழையாமல் இருப்பதைத் தடுக்கவே அந்த வேலி உள்ளே நுழைவோரை அங்கிருக்கும் பாதுகாவலர்கள் பதிவு செய்த பின்னரே, அனுமதிக்கின்றனர். பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் 14 பேரைக் கொண்ட ஒரு செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. ஒரு மேலதிகாரியின் பார்வையில் அதன் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன. வீட்டு உரிமையாளர்களிடமிருந்து மாதாந்திர பராமரிப்புக் கட்டணத்தையும் நிரந்தர வைப்புத் தொகையையும் வசூலிக்க அவர் பணிக்கப்பட்டுள்ளார். இந்த வீடமைப்பில் வசிப்போர் பெரும்பாலும் வீடுகளின் உரிமையாளர்களாக இருப்பார்கள். அதில் குடும்ப உறுப்பினர்களும் வசிக்கின்றனர். அதேவேளை அந்த அடுக்கு மாடி வீடுகளில் வாடகைக் குத் தங்கி இருப்போரும் உள்ளனர். இந்நிலையில் அந்த அடுக்ககங்கள் ஹோம் ஸ்டே என்று சொல்லப்படும் வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருக்கும் முறையிலும் பலர் தங்கியிருக்கின்றனர். உரிமையாளர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு வாடகைக்கு விட்டு பணம் வசூலித்தும் வருகின் றனர். பெரும்பாலும் இம்மாதிரியான ஹோம் ஸ்டே முறையில் வசூலிக்கப் படும் கட்டணம் ஹோட்டல்களில் வசிக்கும் கட்டணத்தைவிட மிகவும் குறைவாக இருக்கும். இந்நிலையில், அம்மாதிரி அந்த அடுக்ககங்களில் தற்காலிகமாகவும் வாடகைக்கும் தங்கியிருக்கும் நபர்களின் நடவடிக்கைகள் சில சமயங்களில் கண் கூசும் நிலையில் அநாகரிகமாகவும் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில சமயங்களில் அங்கு தங்கி யிருக்கும் பெண்களை சீண்டி தொந் தரவு தரும் நடவடிக்கையும் நடந்தே வருகின்றன. மேலும் பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாகவும் அவர்களைப் பயமுறுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அங்கு தற்காலிகமாகத் தங்கி யிருக்கும் இம்மாதிரியானவர்கள் அ அந்த வீடுகளுக்கு உரிமையாளர்கள் போல அருவருக்கத்தக்க வகை யில் இருப்பதாக ஜான் என்பவர் குறிப்பிடுகிறார். அடுக்கக குடியிருப்புகளில் உள்ள வசதிகளை அவர்கள் முழுமையாகப் பயன்படுத்த விரும்புவதாகவும், தாங்கள் அளிக்கும் பணத்திற்கு ஏற்றவாறு அந்த வசதிகளைப் பயன்படுத்தி அதனை பல வேளை களில் பழுதாக்கி விடுவதும் தெரிகிறது. அண்மையில் ஈப்போ வில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 33 வயதான ஹோம் ஸ்டேவில் தங்கியிருந்த நபர் தமது மகனை அங்குள்ள நீச்சல் குளத்தில் நீந்த அனுமதிக்காத 64 வயதான பாதுகாவலர் ஒருவரைக் கடுமையாக தாக்கி, கடுமையான காயத்துக்கு உள்ளாகியுள்ளார். சம்பந்தப்பட்ட பாதுகாவலர் 8 மாத கால சிகிச்சை பலனளிக் காமல் அண்மையில் பரிதாபமாக மரணம் மரணம் அடைந்தார். அதனை அடுத்து, இப்போது அந்த நபர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தங்களது சொந்த வீடுகளை இம்மாதிரி ஹோம் ஸ்டே முறையில் வாடகைக்கு விடுவதற்கு முன்னர், அந்த அடுக்கக நிர்வாகத்திடம் முறையான அனுமதியைப் பெற்று அங்கு தங்க இருப்போரின் விபரங் களைப் பதிவு செய்த பின்னரே, அம்மாதிரி வாடகைக்கு விடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வேளைகளில் அந்த அடுக்குமாடி வீடுகளில் இருக்கும் சில போதைப்பொருள் விவகாரங்களில் சம்பந்தப்பட்டுள்ள நபர்களைத் தேடி போலீசார் அடிக்கடி வந்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்து கூட்டிச் செல்வது வாடிக்கை யான செயலாக உள்ளது. இம்மாதிரி அங்கு தங்கியிருப்போர், அதனை ஹோட்டல் போல நினைத்து, எந்தச் சட்டத்திற்கும் இணங்காமல், விதிமுறைகளை மீறி சட்ட விரோதமாக நடந்து கொள்வது கவலையை அளிக்கிறது. இந்நிலையில் நாட்டில் பலரும் இம்மாதிரியான அடுக்ககங்கள் தங்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்ற மனநிலையில்தான் அங்கு வீடுகளை வாங்கி வசிக்கின்றனர் . சில சமயம் தங்களின் பாதுகாப்புக்கு மிரட்டல் இருந்தால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே இந்த அடுக்ககங்களை நிர்வகிக்கும் நிர்வாகத்தினர் இம்மாதிரியான சட்டவிரோத காரியங்களில் ஈடுபடும் நபர்களை அங்கு தங்க வைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். கடுமையான விதிமுறைகளை விதிக்க வேண்டும் என்று ஜான் கேட்டுக் கொண்டார். இம்மாதிரியான அடுக்ககங்களை ஹோம் ஸ்டே என்ற முறையில் பயன்படுத்தாமல் தனிப்பட்ட பங்களா வீடுகளில் செய்தால் அது எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். மேலும், சர்வீஸ் அபார்ட்மெண்ட் போன்ற வர்த்தக ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் சுற்றுப் பயணிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் அம்மாதிரியான இடங்களுக்குச் சென்று தங்கலாம். வீடுகளை வாங்குவோர் அமைதியாக வசிக்கவும், தொல்லையில்லாமல் வாழவுமே அதனைச் செய்யும்போது அதற்கு இடையூறாக வெளிநபர்கள் நடந்து கொள்வதை யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஜோன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − two =