அடுக்குமாடியிலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டியவரின் செயல் முறியடிப்பு


அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 16 -வது மாடியிலிருந்து குதிக்கப் போவதாக மிரட்டிய ஆடவனின் செயலை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் முறியடித்தனர்.இச்சம்பவம் நேற்று முன்தினம்காலை 7.32 மணியளவில் ஆயர் ஈத்தாம்,பாடாங் தேம்பாக் அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது.
மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக குடும்பத்தினரையும், அங்குள்ள பொதுமக்களையும் மிரட்டிக் கொண்டிருந்த 20 வயது ஆடவனை, சமாதானப்படுத்தி ஆபத்திலிருந்து காப்பாற்றியதாக பாயா தெருபோங் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் நடவடிக்கைக்குழுத் தலைவர் யூஸ்ரி சகாரியா கூறினார்.
இவன் பசை நுகரும் பழக்கமுடையவன் எனவும்,அதன் போதையில் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கலாம் என தங்களுக்கு கிடைத்த தகவலின் மூலமாக தெரிய வந்ததாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − two =