அடிமட்ட உணர்வுகள் வேறுவிதமாக இருந்தாலும் மசீச வேட்பாளருக்கு அம்னோ ஆதரவு

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அம்னோ அடிமட்ட நிலையில் உணர்வுகள் வேறு வகையாக இருந்தாலும், மசீச வேட்பாளர் வீ ஜெக் செங்கிற்கு அம்னோ தனது ஆதரவை வழங்கும் என்று அக்கட்சியின் தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடி கூறினார்.
அங்கு அம்னோ வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும் என்று பலரும் விரும்பினாலும் தேசிய முன்னணி உறுப்புக்கட்சிகளோடு கொண்டுள்ள அந்த ஒத்துழைப்புக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய முன்னணி தேர்தல் செயல் வியூகத்திட்டங்கள், இந்த ஒற்றுமை உணர்வுடன் ஒரே நோக்கத்தோடு சென்று வீக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்றார் அவர்.
தேசிய முன்னணி வேட்பாளராக மசீச சார்பில் நிறுத்தப்படும் வீக்கு, அம்னோ முழுமையான ஆதரவை வழங்கும். தஞ்சோங் பியாயில் 2 தவணைகள் எம்பியாக இருந்த வீ, கடந்த 14ஆவது பொதுத்தேர்தலில் 524 குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் டாக்டர் முகமட் பாரிட்டிடம் தோல்வி கண்டார்.
இந்தத் தொகுதி தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என அம்னோவும் மசீசவும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தன. உள்ளூர் அம்னோ டிவிஷன், அதன் தலைவர் ஜெரிப்டின் அட்டான் என்பவரை இதற்கு முன்பு தேர்வு செய்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 10 =