அடிப் மரண விவகாரம்: நால்வர் தப்பி ஓட்டம்?

0

தீயணைப்பு வீரர் முகமட் அடிப் காசிம் மரணம் தொடர்பில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட 4 சந்தேகப் பேர்வழிகளுக்கு இதில் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய சிஐடி பிரிவின் முதன்மை உதவி இயக்குநர் மியோர் பரிடாலாத்ராஷ் வாஹிட் கூறினார். எனவே, அவர்கள் நாட்டைவிட்டு ஓடியிருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த நால்வர் எங்கே என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். உண்மையில் இந்த நால்வரை நாங்கள் கைது செய்யவில்லை. அந்த நேரத்தில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் 12 பேர். அவர்கள் அனைவரும் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இவர்கள் யாரும் நாட்டைவிட்டு ஓட வேண்டிய அவசியம் இல்லை. இவர்களிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். இந்த சம்பவத்தோடு அவர்களை தொடர்புபடுத்த எந்த ஆதாரத்தையும் நாங்கள் காண முடியவில்லை என்று நேற்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
சீபீல்டு சம்பவத்திற்குப் பின்னர் கைதான நால்வர் எங்கே? நான் இந்த விவகாரத்தை அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப் போகிறேன் என்று அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நோர் ஒமார் நேற்று கூறியிருந்தார்.
அனைத்துத் தரப்பினரும் இது போன்ற அறிக்கைகளை விடுப்பதை நிறுத்துமாறு மியோர் கேட்டுக்கொண்டார்.
புலன் விசாரணை பற்றி நாங்கள் விளக்கி இருக்கிறோம். எல்லாம் முடிந்தவுடன் சட்டத்துறைத் தலைவரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =