அடிப்பின் குடும்பத்திற்கு அரசாங்கம் ரிம1.5 மில்லியன் வழங்கியது

முகமது அடிப் முகமது காசிமின் குடும்பத்திற்கு கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி அரசாங்கம் 1.5 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழங்கியது. அம்னோவின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இது குறித்து குறிப்பிடும் வேளையில் , தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் படையினரின் மரணம் தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருகிறது. “ஆனாலும், இந்த செய்கைனது மக்களின் பொதுநலனைப் பாதுகாப்பதில் அம்னோவின் உறுதிப்பாட்டிற்கு சான்றாக விளங்குகிறது” என்று இஸ்மாயில் நேற்று அம்னோ பொதுப் பேரவையில் தனது நிறைவு உரையில் கூறினார். இந்த வழக்கின் முழு அறிக்கையை இம்மாத இறுதியில் சிறப்புக் குழு அளிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − twelve =