அக்ரோபேங்க்: ஆறு மாதத்தில் கூடுதல் லாபக் கட்டணங்களை வசூலிக்காது

0

மீட்பு நடமாட்டக் கட்டுப்பாடு ஆணையின் போது அனைத்து தனிநபர் மற்றும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன (எஸ்.எம்.இ) வாடிக்கையாளர்களுக்கு நிதியளிப்பதில் கூடுதல் லாபக் கட்டணங்களை விதிக்கப் போவதில்லை என்று அக்ரோபேங்க் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்த கடினமான காலங்களில் எங்கள் வாடிக்கையாளர்களின் சுமையக் குறைக்கும் முயற்சியின் காரணமாக நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று அக்ரோபேங்கின் தலைமை நிர்வாக அதிகாரியான கதீஜா இஸ்கந்தர் அந்த அறிக்கையில் கூறியிருந்தார். அக்டோபர் 2020 முதல் வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தும் தொகையை செலுத்துவார்கள் என்றும் கூடுதல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படாது என்றும் அவர் கூறினார். இந்த அறிவிப்பு அவர்களின் நிதிக் கடமைகளிலிருந்து மேலும் நிவாரணம் வழங்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் மற்ற சவால்களை எதிர்கொள்ளவும் உதவும் என்று வங்கி நம்புகிறது.
“கோவிட்-19 தொற்றுநோய் ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையாகும். இது விவசாயத் தொழில், குறிப்பாக சிறு மற்றும் மைக்ரோ வணிகங்கள் உள்ளிட்ட வணிகங்களை பாதித்துள்ளது. இந்த நடவடிக்கை எங்கள் பல மைக்ரோ நிதி வாடிக்கையாளர்களுக்கு பயனளிக்கும்” என்று அவர் கூறினார்.
அக்ரோபேங்க் தனது வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் ஒத்திவைக்கப்படுவது மட்டுமின்றி மேலும் வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் வலியுறுத்தினார். அக்ரோபேங்கின் கூடுதல் சேவைகளைப் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் றறற.யபசடியெமே.உடிஅ.அல/nடி-அடிசய இல் ஒரு படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கு உதவும் வகையில், அக்ரோபேங்க் அவர்களுக்கு பல பயிற்சி மற்றும் ஆலோசனை அமர்வுகளை வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + 12 =