அக்டோபர் மாதத்தில் பக்காத்தான் அரசாங்கம் வெ.1,000 கோடி கடன் பெற்றுள்ளது!

0

பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் நாட்டின் கடன் சுமையை அதிகரித்து வருவதாக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் குற்றஞ்சாட்டினார்.

இம்மாதம் மட்டும் 1,000 கோடி வெள்ளி கடனை நடப்பு அரசாங்கம் வாங்கியுள்ளது. நடப்பில் உள்ள கடனை இந்த அரசாங்கம் திருப்பிச் செலுத்தவில்லை என்றார் அவர்.
அக்டோபரில் ’போன்ட் விநியோகம் மூலம் 300 கோடி வெள்ளியை கடனாக இந்த அரசாங்கம் பெற்றுள்ளது. அக்டோபர் 15இல் 250 கோடி வெள்ளி மற்றும் அக்டோபர் 23இல் 100 கோடி வெள்ளி போன்ட் விநியோகம் மூலம் கடனாகப் பெற்றுள்ளதாக பேங்க் நெகாரா புள்ளிவிவரம் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த அக்டோபர் 15இல் மேலும் 350 கோடி வெள்ளியை போன்ட் விநியோகம் மூலம் கடனாக பக்காத்தான் அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ளதாக நஜிப் தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்தில் நடப்பில் உள்ள கடன் எதையும் பக்காத்தான் அரசாங்கம் திருப்பி செலுத்தவில்லை என அவர் குறிப்பிட்டார்.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் கீழ் நாட்டின் கடன் 810 பில்லியன் வெள்ளியாக உயர்ந்திருப்பதாக ஏற்கெனவே நஜிப் கூறியிருந்தார்.
முந்தைய தே.மு. அரசாங்கம் ஃபெல்டாவை கெடுபிடி செய்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × one =