அகில உலக யோகா போட்டியில் 54 மலேசியர்கள் பங்கேற்பு

மக்கள் சேவைக்கு அரசியல் சாயம் தேவையில்லை. எங்களுக்கு தொடர்ந்து தலைவராக என்றா கம்பத்து மண்ணின் மைந்தரான மாதவனையே நாங்கள் தேர்வு செய்துள்ளோம் என என்றா புறநகர் இந்திய சமூகத்தினர் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 10-00 மணியளவில் அங்குள்ள மக்கள் ஒன்றிணைந்து அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அந்நிலையில், அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த என்றா கம்பத்து மக்களோடு மக்களாகவும், பிரச்சினையை எதிர்நோக்கும்போது நாங்கள் அழைக்காமலேயே தானாகவே முன்வந்து அதற்கான தீர்வு கண்டு வருகின்றவர்தான் மாதவன் என்று முனுசாமி முனியன், எஸ்.மூக்கன், எஸ்.ஆறுமுகம், ஆர்.ஜெயபாலன், கே.அப்பு, எஸ்.கோபால், பி.நடராஜன், இராமச்சந்திரன், (அப்போய்) கோபாலகிருஷ்ணன், பி.சுப்புலட்சுமி, எல்.கோமதி, ஏ.முத்து கவுண்டர் ஆகியோர் கூறியுள்ளனர். எந்த நேரத்திலும் அவர் வீட்டுக்கதவை தட்டினால் உடனடியாக திறந்து பிரச்சினையைக் கேட்டறிவார். மக்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு முடியாது என்ற பதில் அவர் தந்ததில்லை. எங்களைப் பொறுத்தவரையில், அவருடைய பொதுப்பணி தொடர நாங்கள் முழுமையான ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவோம் எனக் குறிப்பிட்டனர். மாதவன் முன்னாள் பக்காத்தான் ஹராப்பான் பேரா அரசாங்கத்தின்போது என்றா கம்பத்துக்கு தலைவராக அங்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெ.க.நாராயணன்
கோலாலம்பூர், ஆக. 1-
அண்மையில் இங்குள்ள நேதாஜி மண்டபத்தில் அகில உலக யோகா போட்டி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மலேசிய இந்தியத் தூதரகத்தின் உயர் அதிகாரி அர்ச்சனா நாயர் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்து 54 பேர் பங்கேற்றனர்.
போட்டியில் 14 மலேசியர்கள் பரிசுகள் பெற்றனர். 7 பேர் பிரிபேக்ட் லைப் மேனேஜ்மென்ட் இயக்கத்தின் சார்பில் வெற்றி பெற்றனர் பிரிபேக்ட் மேனேஜ்மென்ட் இயக்குநரும் யோகா பயிற்சியாளருமான டாக்டர் ஆ.ராஜேந்திரன் மாஸ்டர் பிரிவில் முதல் நிலையில் வெற்றி பெற்றார். அவரின் 2 மாணவர்கள் முதல் பரிசைப் பெற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here