அகில உலக அமைதி பல்கலைக்கழகம் சார்பில் 8 பேருக்கு டாக்டர் விருது

0

சமூகத்திற்கு சேவையாற்றுவதில் அதிகளவு முனைப்பு காட்டி வரும் சிலரை அடையாளம் கண்டு ஒவ்வொரு ஆண்டும் அகில உலக அமைதி பல்கலைகழகம் டாக்டர் விருதுகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் இவ்வாண்டு டாக்டர் கனபூரன் ஆறுமுகம், டாக்டர் லியோவ் சீ பேங், டாக்டர் தமிழ்ச் செல்வி, டாக்டர் விஜயன், டாக்டர் கிருபாகரன், டாக்டர் ரவிந்திரன், டாக்டர் அருள்ராஜ், டாக்டர் உதய பானு ரவிந்திரன் ஆகியோருக்கு தலைநகரிலுள்ள தங்கு விடுதி ஒன்றில் டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டன. அகில உலக அமைதி பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மலேசிய தூதர், டாக்டர் மோகன் முனியாண்டி இந்நிகழ்வினை ஏற்பாடு செய்ய, அதில் டாக்டர் லெட்சுமணன் சிறப்பு வருகை புரிந்தார்.
இதனிடையே, சமூக சேவையாளராக வாழ்ந்து, தனக்கென்று வாழாதவர்களும் இந்த உலகத்தில் உண்டு. அவர்களுக்கு எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லை. மற்றவர்களுக்கு சேவையாற்றுவதை முதன்மை கடமையாக நினைப்பார்கள். அத்தகையவர்களுக்கு இந்த விருதளிப்பு நிச்சயமாக ஓர் உந்துதலை தரும். குறிப்பாக, அவர்கள் தொடர்ந்து சேவையாற்ற உற்சாகத்தை அளிக்கும் என்று டாக்டர் லெட்சுமணன் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த அப்துல் கலாம் அறவாரியத்திலிருந்து செல்வம் ராசு, டாக்டர் பாலகிருஷ்ணன், லீலாவதி, டாக்டர் ஹாஜா சைட் இப்ராஹிம், டாக்டர் நந்தகோபால், டாக்டர் ராஜேந்திரன், அருள்மணி, ஆயிஷா சைட் இப்ராஹிம் ஆகியோர் பேராளர்களாக கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 1 =