அகதிகள் வேலை செய்ய அனுமதி;அமைச்சரவையின் துணைக்குழு ஆராயும்

0

நாட்டில் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்திருப்போரை வேலை செய்ய அனுமதிக்கலாமா என்பது பற்றி அமைச்சரவையின் துணைக் குழு ஆராய்ந்து வருவதாக மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் தெரிவித்தார். அந்தக்குழுவில் மனிதவளம், உள்துறை, வெளிவிவகாரம் ஆகிய துறைகளின் அமைச்சர்களுடன் துணைப் பிரதமரும் உறுப்பியம் பெற்றுள்ளார். அதன் அறிக்கையானது பின்னர் அமைச்சரவையின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும் என தொழிலாளர் சட்ட ஆய்வு எனும் கருத்தரங்கில் கலந்து கொண்டபோது, குலசேகரன் தெரிவித்தார். அகதிகளை வேலை செய்ய அனுமதிக்கலாமா என்பதைக் கண்டறிய சம்பந்தப் பட்டோருடன், குறிப்பாக அகதிகளுக்கான ஐநா ஆணையருடன் கலந்தாய்வு நடத்தப்படும்.
இந்த விவகாரத்தில் அகதிகள் பாதிக்கப்படக்கூடாது என அரசு விழிப்பாக இருப்பதாகவும் குலசேகரன் தெரிவித்தார்.
அகதிகளுக்கு வேலை செய்ய அனுமதியளிக்க அரசு ஆய்வு செய்யப்படும் என கடந்த டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here