அகதிகளை ஒரே குடியிருப்புப் பகுதியில் அமர்த்துவதற்கு அமைச்சு ஆலோசனை

0

கோலாலம்பூர், ஆக. 10-
நாடெங்கிலும் பரவலாக வாழும் ஐக்கிய நாட்டு நிறுவனத்துடன் (யு.என்.எச்.சி.ஆர்.) பதிவு பெற்ற அகதிகள் அனைவரையும் ஒன்று திரட்டி ஒரு மறுகுடியிருப்பு கிராமத்தில் அமர்த்துவது பற்றி வீடமைப்பு மற்றும் ஊராட்சி மன்றங்களின் அமைச்சு ஆலோசனை செய்து வருகிறது. எனினும் இவ்விஷயம் அமைச்சரவை நிலையில் இன்னும் விவாதிக்கப்படவில்லை.
இவ்விவரங்களைச் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஸுரைடா கமாருடின் பெர்னாமாவிடம் நேற்று முன்தினம் தெரிவித்தார். பேராபத்து மேலாண்மை பற்றிய நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் அவர் பெர்னாமாவிடம் இதனைக் கூறினார்.
இந்நடவடிக்கை நாட்டில் உள்ள அகதிகளைக்குறிப்பாக ரோகிங்யாக்களை அணுக்கமாகக் கண்காணிக்க உதவுவதுடன் அவர்களின் சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகளை அது பூர்த்தி செய்யும் என்று அவர் கூறினார்.
அத்தகைய மறுகுடியிருப்பு பகுதிகளில் நாம் பள்ளிக்கூடங்களை உருவாக்கலாம். மலேசியாவின் வாழ்க்கை முறை மற்றும் கலாசாரக் கூறுகளை அவர்களுக்கு போதிக்கலாம்.
’வெளிநாட்டுத் தொழிலாளர் களை நம்பியிராமல் நாம் இந்த அகதிகளை சில துறைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அவர் மேலும் கூறினார்.
’ஐக்கிய நாட்டு அங்கீகாரம் பெற்ற இந்த அகதிகளை நன்கு பயன்படுத்திக் கொண்டால் நாம் வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை மேலும் குறைக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − two =