ஃபெர்ரி சேவைக்கு பிரியாவிடை கொடுக்க வருகை தாருங்கள்!

  நூற்று இருபத்தாறு ஆண்டுகள் பழைமையான பினாங்கு ஃபெர்ரி சேவைக்கு பிரியாவிடை கொடுப்பதற்காக புத்தாண்டின் முதல் நாளன்று பினாங்கு தீவின் ஃபெர்ரி முனையத்திற்குத் திரண்டு வரும்படி ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் பினாங்கு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வியாழக்கிழமையான டிசம்பர் 31ஆம் தேதியன்று ஃபெர்ரி முனையத்திற்கு திரண்டு வந்து ஃபெர்ரி சேவைக்கு இறுதி பிரியாவிடை கொடுங்கள் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் லிம் தெரிவித்துள்ளார். முதலாவது பினாங்கு பாலம் கட்டி முடிப்பதற்கு முன்பாக அடிப்படை போக்குவரத்து வசதியாக விளங்கி வந்த ஃபெர்ரி சேவையை நினைவுகூர்வதற்காக நாம் அதில் இறுதியாக ஒரு பயணத்தை மேற்கொள்வோம் என்று அவர் சொன்னார்.
  நமது குழந்தைகளுக்காக வரலாற்றுப் பெருமை மிக்க ஃபெர்ரி சேவையின் பாரம்பரியத்தையும் வரலாற்றையும் நாம் பேணி வரவேண்டியது அவசியம் என்றும் அவர் சொன்னார்.
  டிசம்பர் 31ஆம் தேதி காலை 10.00மணிக்கு அந்த முனையத்தை வந்தடைவேன் என்றும் லிம் குறிப்பிட்டார்.
  பினாங்கு ஃபெர்ரி சேவையைத் தொடர்ந்து பராமரித்து வரப் போவதாக நிதியமைச்சர் தெங்கு ஸஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் நாடாளுமன்றத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அதனை நிறைவேற்ற அவர் தவறிவிட்டார் என்றும் லிம் கூறினார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here