ஃபூட்பண்டா ரைடர்ஸ்கள் வேலை நிறுத்தம்: புதிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்

0

தொழிலாளர்களின் நலன் களைப் பாதுகாப்பதற்கு மேலும் பல சட்டங்களை உருவாக்க வேண்டும்.
கடந்த திங்கள்கிழமையன்று புதிய சம்பளத்திட்டத்தை எதிர்த்து ஃபூட்பண்டா ஆன்லைன் உணவு விநியோக கம்பெனியின் தொழிலாளர்களான ஃபூட்பண்டா ரைடர்ஸ்கள் நடத்திய வேலை நிறுத்தம் இதனை தெளிவாகக் காட்டுகிறது என்று இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் கூறினார்.
செவ்வாய் இரவு ஏறக்குறைய 100 ஃபூட்பண்டா ரைடர்ஸ்களைச் சந்தித்துப் பேசிய பிறகு அமைச்சர் நிருபர்களிடம் இவ்வாறு கூறினார்.
செவ்வாய் இரவு அமைச்சரின் வீட்டுக்கு சென்ற ஃபூட்பண்டா ரைடர்ஸ் குழுவினர் தங்கள் கம்
பெனியின் புதிய சம்பளத்திட்டத் தைப் பற்றி முறையிட்டனர்.
பழைய சம்பளத்திட்டப்படி ஃபூட்பண்டா ரைடர்ஸ் ஒரு மணி நேரத்திற்கு ரிங்கிட் 4 அடிப்படை சம்பளமும் ஒவ்வொரு உணவு விநியோகத்திற்கும் கூடுதல் தொகையும் (டிப்ஸ்) பெற்றனர். ஆர்டர்களுக்கான (டிப்ஸ்) அனுப்புநரின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு ரிங்கிட் 3 முதல் ரிங்கிட் 5 வரை இருக்கும்.
புதிய கட்டணத்திட்டம் மணிநேர அடிப்படை சம்பளத்தை நீக்கிவிட்டு ஆர்டர்களுக்கான கட்டணத்தை வெ. 4.50லிருந்து வெள்ளி 7 வரை அதிகரிக்கிறது.
எனினும் வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லாத புதிய கட்டணத்திட்ட அறிமுகத்தை ஃபூட்பண்டா தொழிலாளர்கள் எதிர்த்து வருகின்றனர். அப்புதிய கட்டணத்திட்டத்தின் வழி தங்களின் வருமானம் பாதி (50 சதவீதம்) குறைந்து விடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
செவ்வாய் இரவு ரைடர்களின் முறையீடுகளைக் கேட்டறிந்தேன். அவர்கள் கூறுவதற்கும் அக்கம்
பெனியின் நிர்வாகம் கூறும் விளக் கத்திற்கும் சில முரண்பாடுகள் இருக்கின்றன என்று அமைச்சர் சைட் சாடிக் மேலும் கூறினார்.
இ-ஹேய்லிங் கம்பெனிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பொருட்டு புதிய சட்டத்தை உருவாக்குமாறு அமைச்சரவைக்கு நான் ஆலோசனை கூறப்போகிறேன் என்று அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + twelve =